2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

காதலியை கரம்பிடிக்க ஆணாக மாறிய பெண்

Editorial   / 2022 ஜூன் 30 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய பெண் காதலியுடன் இருக்கும் லெஸ்பியன் பாலியல் உறவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் காதலியுடன் வாழ்நாள் முழுதும் இருக்க அறுவை சிகிச்சை மூலம தன்னை ஆணாக மாற்றிக் கொண்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.

இரு பெண்களும் ஒருவரையொருவர் வெறித்தனமாகக் காதலித்தனர். எனவே எந்த தடைகளையும் தவிர்க்கவும், மற்றவர்களின் குறுக்கீட்டை நிறுத்தவும் ஒரு பெண் தனது பாலினத்தை மாற்ற முடிவு செய்தது பலதரப்பிலும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையின்  பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர், அப்போது அவரது மேல் உடல் பாகங்கள் மற்றும் மார்பு மறுசீரமைப்பு ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டன.இந்த அறுவை சிகிச்சைக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் ஆகும் அதன் பிறகு இந்தப் பெண் ஆணாக மாறிவிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .