2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

தோட்ட அதிகாரியை கண்ணீருடன் வழியனுப்பிய தொழிலாளர்கள்

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 03 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பி.கேதீஸ்

பெருந்தோட்டங்களில்  தோட்ட நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்கிடையே பல்வேறு கசப்பான சம்பங்கள் அண்மைகாலமாக பதிவாகி வருகின்ற நிலையில், தோட்ட அதிகாரியொருவரை தோட்டத் தொழிலாளர்கள் கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்த சம்பவம் வட்டகொடை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

 அதேப்போல் தொழிலாளர்களை தன் உறவுகள் போல வழி நடத்தி அன்பு செலுத்திய குறித்த தோட்ட அதிகாரியும் அத்தொழிலாளர்களை விட்டு பிரிய மனம் இல்லாது கண்கலங்கியுள்ளார்.

 ஹேலீஸ் கம்பனியின் கீழ் இயங்கும் தலவாக்கலை- வட்டகொடை தோட்டத்தில் பல வருடங்களாக அங்கு சேவையாற்றிய தோட்ட அதிகாரி துல்சங்க ஜயதிலக்க, நேற்று முன் தினம் மட்டுக்கலை தோட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இடமாற்றம் பெற்ற அத்தோட்ட அதிகாரி அத்தோட்டத்திலிருந்து செல்லும்போது, அவர் சேவையாற்றிய வட்டகொடை கீழ்பிரிவு, வட்டகொடை மேற்பிரிவு, யொக்ஸ்போட் ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அத்தோட்ட உத்தியோகத்தர்கள் அனைவரும் கண்ணீர் சிந்திய நிலையில் அவரை அங்கிருந்து வாகன பேரணியாக மட்டுக்கலை தோட்டம் வரை வந்து வழியனுப்பியுள்ளனர்.

 மேலும் வட்டகொடை தோட்டத்தை இலாபகரமாக தரம் உயர்த்தியுள்ள குறித்த அதிகாரி, தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக வேலை நாட்களையும் வழங்கி தொழிலாளர்களின் நலனில் கூடுதல் அக்கரை செலுத்தியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .