2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

கோணாவத்தை ஆற்றினை சட்டவிரோதமாக மண்ணிட்டு நிரப்புவதை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை

Super User   / 2011 மார்ச் 28 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனைப் பிரதேசத்திலுள்ள கோணாவத்தை ஆற்றினை சட்டவிரோதமாக மண்ணிட்டு நிரப்புவதை தடுத்து நிறுத்துமாறும், ஏற்கனவே நிரப்பட்டுள்ள இடங்களிலுள்ள மண்ணை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் புதிய தவிசாளர் ஏ.எல்.எம். நசீரிடம் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

சுமார் 350 தொடக்கம் 400 அடிகள் வரையிலான அகலத்தினையும், 04 கிலோ மீற்றர் நீளத்தினையும் கொண்ட அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆறானது, அண்ணளவாக 30 ஆயிரம் ஏக்கர் நெற் செய்கை நிலங்களின் மேலதிக நீரை தேக்கி வைப்பதற்கும், கடலில் கொண்டு சேர்ப்பதற்கும் பயன்பட்டு வருகிறது.

அதேவேளை, சுமார் நூற்றுக்கும் அதிமான மீனவர்கள் இந்த ஆற்றில் மீன்பிடித் தொழிலையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.  

மேலும், கடந்த சுனாமியின் போது, இப்பிரதேசம் பாதிக்கப்படாமைக்கும்  கோணாவத்தை ஆறே, காரணமாக இருந்தது எனக் கூறப்படுகிறது.

கடலில் இருந்து கிளம்பிய நீரினை இந்த ஆறு தனக்குள் தேக்கி வைத்துக் கொண்டதால், சுனாமியின் ஆபத்திலிருந்து அட்டாளைச்சேனைப் பிரதேசம் தப்பித்துக் கொண்டதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான சிறப்புகளைக் கொண்ட கோணாவத்தை ஆற்றினை, சிலர் சட்டவிரோதமாக மண்ணிட்டு நிரப்பி காணிகள் பிடித்து வருகின்றனர்.

எனவே, அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு இயற்கை வழங்கிய கொடையான கோணாவத்தை ஆற்றினை பாதுகாப்பதற்கும், அதனை மண்ணிட்டு நிரப்பப்படுவதைத் தடுப்பதற்குமான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அப்பிரதேச மக்கள் புதிய தவிசாளரிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0

  • RINAS Tuesday, 29 March 2011 01:24 AM

    வருடங்களுக்கு முன் இது தொடர்பாக முன்னாள் தவிசாளர் அன்ஸிலினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனவே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .