2021 ஜூலை 31, சனிக்கிழமை

கல்முனை மாணவர்களுக்கு 'சிசு திரிய' புலமைப்பரிசில்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 27 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(அப்துல் அஸீஸ்)

சமுர்த்தி உதவிபெறும் குடும்பங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான 'சிசு திரிய' புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று மாலை கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலக மட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 30 மாணவர்களுக்கு மாதாந்தம் தொடர்ச்சியாக பெற்றுக்கொள்ளும் விதத்தில் இந்தப் புலமைப்பரிசில் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனைப் பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் ஏர்.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதியாக பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் கலந்துகொண்டதுடன் பிரதேச செயலக கள உத்தியோகத்தர்கள், மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .