2022 ஜூலை 02, சனிக்கிழமை

இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டை தவற விடவுள்ள ஷகிப்

Shanmugan Murugavel   / 2022 மே 11 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ள இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டை பங்களாதேஷின் முன்னாள் அணித்தலைவரான ஷகிப் அல் ஹஸன் தவறவிடவுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே அல்-ஹஸன் இப்போட்டியைத் தவறவிடவுள்ளார்.

அல்-ஹஸனுக்கான பிரதியீடொன்றை உடனடியாக பங்களாதேஷ் பெயரிடாதபோதும், காயமடைந்த மெஹிடி ஹஸன் மிராஸுக்காக குழாம் அறிவிக்கப்பட்ட பின்னர் மொஷாடெக் ஹொஸைனை குழாமில் பங்களாதேஷ் சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .