2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

இத்தாலியை வென்று இறுதிப் போட்டியில் ஸ்பெய்ன்

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 07 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தேசங்களுக்கான லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஸ்பெய்ன் தகுதி பெற்றுள்ளது.

இத்தாலியில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான அரையிறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றே இறுதிப் போட்டிக்கு ஸ்பெய்ன் தகுதி பெற்றிருந்தது.

ஸ்பெய்ன் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் பெரன் டொரஸ் பெற்றிருந்தார். சக முன்களவீரரான மிகேல் ஒயர்ஸ்பல்லிடமிருந்து இரண்டு தடவைகளும் பந்தைப் பெற்றே டொரஸ் காலாலும், தலையால் முட்டியும் கோல்களைப் பெற்றிருந்தார். இத்தாலி சார்பாகப் பெறப்பட்ட கோலை லொரென்ஸோ பெல்லகிரினி பெற்றிருந்தார். பெடெரிக்கோ சியெஸ்காவின் அதிரடி நகர்வின் மூலமே பெல்லகிரினி கோலைப் பெற்றிருந்தார்.

இப்போட்டியின் 30ஆவது நிமிடத்தில் மஞ்சள் அட்டையைப் பெற்றிருந்த இத்தாலியின் அணித்தலைவர் லியனார்டோ பொனுச்சி, 42ஆவது நிமிடத்தில் ஸ்பெய்னின் அணித்தலைவர் சேர்ஜியோ புஷ்கட்ஸை முழங்கையால் தாக்கிய நிலையில், மீண்டும் மஞ்சள் அட்டை காட்டப் பெற்று, சிவப்பு அட்டை காட்டப் பெற்று மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

இதேவேளை, குறித்த போட்டியில் தோற்றதன் மூலம் 37 போட்டிகளில் தொடர்ச்சியாக தோற்றிருக்காத இத்தாலியின் உலக சாதனை முடிவுக்கு வந்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X