2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

வில்டரை வென்று பட்டத்தைத் தக்க வைத்த பியூரி

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 10 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் குத்துச்சண்டை சபையின் அதிபாரப் பட்டத்தை, பிரித்தானியாவின் டைஸன் பியூரி இன்று தக்க வைத்துள்ளார்.

ஐக்கியு அமெரிக்காவின் டெயோன்டே வில்டரை மூன்றாவது தடவையாக லாஸ் வேகாஸீன் டி மொபைல் அரங்கத்தில், 11ஆவது சுற்றியில் வீழ்த்தியதன் மூலமே பட்டத்தை பியூரி தக்க வைத்துள்ளார்.

ஆரம்பத்தில் வில்டர் ஆக்ரோஷமாக இருந்தபோதும், மூன்றாவது சுற்றில் வில்டரை முதலில் பியூரி வீழ்த்திருந்தார். பின்னர் நான்காவது சுற்றில் இரண்டு தடவைகள் பியூரியை வில்டர் வீழ்த்தியிருந்தார். தொடர்ந்து 10ஆவது சுற்றில் இரண்டாவது தடவையாக வில்டரை பியூரி வீழ்த்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .