2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

உலகக் கிண்ணத்தில் ஷொய்ப் மலிக்

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 09 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்மாதம் ஆரம்பிக்கவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் குழாமில், அவ்வணியின் முன்னாள் தலைவர் ஷொய்ப் மலிக் இடம்பெற்றுள்ளார்.

கீழ் முதுகுப் பகுதி காயம் காரணமாக ஷொய்ப் மக்ஸ்கூட் குழாமிலிருந்து விலகிய நிலையிலேயே அவரையே 39 வயதான மலிக் பிரதியிட்டுள்ளார்.

கடந்தாண்டுக்கான இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் பின்னர் பாகிஸ்தானுக்காக மலிக் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக குஷ்டில் ஷா, மொஹமட் ஹஸ்னைன், அஸாம் கானை பக்கர் ஸமன், ஹைதர் அலி, சஃப்ராஸ் அஹ்மட் ஆகியோர் பிரதியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .