2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

தொலைத்தொடர்பு துறை பணியாளர்களில் மேம்பட்ட பெண்களின் பங்களிப்பைக் கொண்டுள்ள எயார்டெல்

S.Sekar   / 2021 ஜூலை 13 , பி.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எயார்டெல், தொலைத்தொடர்பு துறையில் பணி புரியும் ஊழியர்களுக்குள் பெண் பங்களிப்பை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

Great Place to Work மூலம் 2019ஆம் ஆண்டில் 'பெண்கள் பணிபுரிவதற்கான 10 சிறந்த பணியிடங்களில்' ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது, மேலும் 63% க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் நிர்வாக பதவிகளில் உள்ளனர். அனைத்து தொலைத்தொடர்புகளின் முக்கிய செயல்பாடுகளிலிருந்தும் வேலை செய்வதற்கும், பயிற்சியளிப்பதற்கும், பயனடைவதற்கும் எயார்டெல் தொடர்ந்து அனைத்து ஊழியர்களுக்கும் சமமான தளத்தை வழங்கியுள்ளது.

ஆண்களுக்கு கிடைக்கக்கூடிய அதே வாய்ப்புகளை பெண்களுக்கும் வழங்கினால், பெண்களும் தங்கள் அபிலாஷைகளையும் பிற மைல்கற்களையும் தாண்டி வெற்றிபெறும் ஆற்றலைக் கொண்டிருப்பதால் சீரான ஒரு தொழில்துறையை உருவாக்க முடியுமென எயார்டெல் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. எயார்டெல் தொழில்நுட்பத்தின் ஆற்றலில் உறுதியான நம்பிக்கை மற்றும் வாய்ப்புகளை உருவாக்க தொழில்நுட்ப தொடர்பான வேலைவாய்ப்பு மற்றும் இறுதியில் ஒரு மாறுபட்ட திறன் கொண்ட பணியிடத்தை உருவாக்குகிறது.

எயார்டெல் தொடர்ந்து தனது உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், உள்ளடக்கிய மற்றும் மாறுபட்ட பணியிடத்தின் ஊடாக 'புதிய இயல்பை' நிறுவுவதன் மூலம், தொலைத்தொடர்பு துறையில் பெருகிய முறையில் மாறுபட்ட வாடிக்கையாளர் தளத்திற்கு சேவைகளை வழங்க முடிந்துள்ளது. தொலைத்தொடர்பு துறையின் உலகளாவிய உந்துதலின் மையத்தில் இருக்கும் திறமையான ஆண்களையும் பெண்களையும் ஈர்க்கவும் தக்கவைக்கவும் பாலின-வேறுபட்ட ஊழியர் குழு கொண்டிருக்கிறது, இவர்கள் அனைவரையும் புறக்கணிக்க விடாது அனைவருக்கும் சமமான மற்றும் பயனுள்ள ஒரு பணியிடத்தை உருவாக்குவது முக்கிய விடயமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .