2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

பணிபுரிய சிறந்த நிறுவனம்

S.Sekar   / 2021 ஜூன் 27 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ச்சியாக ஒன்பதாவது வருடமாகவும் யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளது. யூனியன் அஷ்யூரன்ஸ் பின்பற்றி வரும் வளர்ச்சி மற்றும் பிரத்தியேக அபிவிருத்திக்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருந்தமைக்காக The Great Place to Work© (GPTW) இனால் இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆய்வின் அடிப்படையில், நிறுவனத்தின் மனித வளங்களை ஊக்குவித்தல் தொடர்பில் காண்பிக்கும் அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில் இது அமைந்துள்ளது.

இந்த கௌரவிப்பு தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் அஷ்யூரன்ஸை ஈடுபாட்டுடனும், மகிழ்ச்சிகரமான பணியிடமாக மாற்றியமைப்பதற்கு நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாக இது அமைந்துள்ளது. ஒன்பது வருட காலமாக இந்த கௌரவிப்பை தக்க வைத்துக் கொள்வதனூடாக, ஒன்பது வருட காலமாக உயர் நம்பிக்கை வாய்ந்த பணியிட கலாசாரத்தில் தொடர்ச்சியாக நாம் வெளிப்படுத்தும் கடின உழைப்பு பிரதிபலிக்கப்பட்டுள்ளது. புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளரை மையப்படுத்திய சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதில் நாம் பெருமை கொண்டுள்ளோம். ஊழியர்கள் தம்மை பாதுகாப்பாகவும், நம்பிக்கையுடனும் உணரும் சூழலை ஏற்படுத்துவதனூடாக, வழமைக்கு அப்பாலான சிந்தனையை கொண்டிருப்பதற்கு உதவியாக அமைந்துள்ளது.” என்றார்.

கம்பனியின் வெற்றிகரமான செயற்பாடு என்பது உறுதியான ஊழியர் பெறுமதி உருவாக்கம் என்பதில் தங்கியுள்ளதுடன், புத்தாக்கம் மற்றும் ஈடுபாட்டை ஏற்படுத்தக்கூடிய பணிச் சூழலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தொழில்நிலை உருவாக்கம் என்பது பிரதான பெறுமதி உருவாக்கும் காரணியாக அமைந்திருக்கும் நிலையில், STEP (Striving To Excellence Programme) ஊடாக நிறுவனம் புத்தாக்கமான வழிமுறையை பின்பற்றி, நிறுவனத்தில் சிறப்பாக செயலாற்றும் ஊழியர்களுக்கு எதிர்கால தலைமைத்துவ நிலைகளுக்கு வளர்ச்சியடையக்கூடிய வகையில் கூட்டாண்மை முகாமைத்துவத்துக்கு வெளிப்படுத்தல்கள் மற்றும் ஈடுபாட்டையும் ஏற்படுத்தியிருந்தது. அத்துடன், வியாபாரத் திட்டங்களில் பங்கேற்பது மற்றும் முன்மாதிரியாக செயலாற்றுவதற்கான வாய்ப்புகள் போன்றனவும் வழங்கப்பட்டிருந்தன. இருப்பிடத்திலிருந்து பணியாற்றும் சூழல்கள் காணப்பட்ட போதிலும், யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியான செயலணியினரை ஊக்கத்துடனும் ஈடுபாட்டுடனும் பேணுவதற்கு வழிகோலியிருந்ததுடன், காலாண்டு குறித்த அறிவித்தல்களை வழங்குவதற்காக டிஜிட்டல் டவுன்-ஹோல்கள் மூலமாக பணியிலும் விளையாட்டு அம்சங்களிலும் சமநிலையை ஏற்படுத்துவதற்கு வழிகோலியிருந்தது. மேலும் ஊழியர்களிடையே முழுமையாக மகிழ்ச்சிகரமான பொழுதுகளை ஏற்படுத்தும் வகையில் மாதாந்த களிப்பூட்டும் நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்திருந்தது.

வாடிக்கையாளரை மையப்படுத்திய செயற்பாடு, புத்தாக்கம் மற்றும் பயிலல் போன்றன நிறுவனத்தின் கலாசாரத்தில் பிரதான அம்சங்களாக அமைந்துள்ளன. யூனியன் அஷ்யூரன்ஸ் தனது நோக்கம், தன்னேற்புத்திட்டம் மற்றும் பெறுமதிகள் போன்றவற்றுக்கமைய செயலாற்றுவதை உறுதி செய்வதுடன், அதன் ஊழியர்கள் மத்தியில் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமையால், பணியாற்றுவதற்கு சிறந்த இடமாகத் திகழ்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X