2023 பெப்ரவரி 07, செவ்வாய்க்கிழமை

கனவுகளுக்கு யூனியன் அஷ்யூரன்ஸ் வலுச் சேர்ப்பு

S.Sekar   / 2022 நவம்பர் 21 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் அஷ்யூரன்ஸ், மஹியங்கனை, ஹந்தகானாவ மகா வித்தியாலயத்துக்கு விளையாட்டு உபகரணங்களை அன்பளிப்புச் செய்திருந்தது. இந்தப் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளினூடாக, அவரின் மாணவர்களின் ரக்பி விளையாட்டுத் திறமைகளை வெளிக் கொண்டுவந்திருந்தமைக்காக இந்த உபகரணத் தொகுதி யூனியன் அஷ்யூரன்சினால் அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தது.

பாடசாலையின் விளையாட்டு ஆசிரியராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாடசாலையில் குறிப்பிட்டளவு விளையாட்டுத் தெரிவுகள் மாத்திரம் மாணவர்களுக்கு காணப்பட்டதை ஆசிரியர் சாமிந்த கருணாரட்ன அவதானித்திருந்தார். மாற்றத்தை ஏற்படுத்தும் உத்வேகத்துடன், இந்த விளையாட்டுக்களில் ரக்பி விளையாட்டையும் அவர் இணைத்திருந்தார். இந்த விளையாட்டைப் பற்றி பல மாணவர்கள் இதற்கு முன்னர் கேள்விப்பட்டிருக்கவில்லை. பல தடைகளைக் கடந்து, தமது கடமைகளுக்கு அப்பால் சென்று, இந்த விளையாட்டை பாடசாலையில் அறிமுகம் செய்திருந்தார். குறிப்பாக, பாடசாலை அணிக்கு உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான நிதி உதவியைக்கூட நாடியிருந்தார்.

இவரின் வழிகாட்டலின் கீழ், ஹந்தகானாவ மகா வித்தியாலயத்தின் இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஒரே வருடத்தினுள் இந்த விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்டது மாத்திரமன்றி, மத்திய மாகாண காலிறுதிப் போட்டி (14 வயதுக்குட்பட்ட) வரை முன்னேறியிருந்தனர். அத்துடன், அபிவிருத்தி ரக்பி போல் காலிறுதிப் போட்டிகள் வரையிலும் முன்னேறியிருந்தனர்.

இந்த மாணவர்களின் தேவைகள் மற்றும் அவர்களின் பயிற்றுவிப்பாளர் காண்பித்திருந்த ஈடுபாட்டை இனங்கண்டிருந்த யூனியன் அஷ்யூரன்ஸ், ரக்பி அணிக்கு அவசியமான சீருடைகள் மற்றும் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றை வழங்கியிருந்தது.

கருணாரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “எமது மாணவர்கள் பல திறமைகளைக் கொண்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது, அவற்றை வெளிக் கொண்டு வருவதற்கான ஒரு ஆதாரமாக நான் இருப்பதையே நான் எதிர்பார்த்தேன். இந்தத் தேவைகளை இனங்கண்டு, பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனமாக முன்வந்து இந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் விளையாட்டு உபகரணங்களை வழங்கியிருந்தமைக்காக நான் யூனியன் அஷ்யூரன்சுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். எதிர்காலத்தில் இந்த மாணவர்களுக்கு சிறப்பான முறையில் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு இந்த உபகரணங்கள் மேலும் உதவியாக அமைந்திருக்கும் என நான் நம்புகின்றேன். அதனூடாக பாடசாலைக்கு மேலும் கீர்த்தி நாமத்தை சேர்க்கக்கூடியதாக இருக்குமெனவும் கருதுகின்றேன்.” என்றார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி மஹேன் குணரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையர்களின் கனவுகளுக்கு வலுச் சேர்ப்பது என்பது யூனியன் அஷ்யூரன்சைச் சேர்ந்த எமது இலக்காகும். கருணாரட்னவின் கதையை இனங்கண்டிருந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இது அனைவருக்கும் முன்மாதிரியானதாக அமைந்துள்ளது. சவால்களுக்கு மத்தியிலும், ரக்பி விளையாட்டை, இந்த சிறுவர்கள் மத்தியில் கொண்டு சேர்த்திருந்தார். இவரைப் போன்ற சிறந்த ஆசிரியர்கள் தம் மாணவர் மத்தியில் தலைசிறந்த வீரர்களாக நிலை கொள்வதுடன், எதிர்காலத் தலைமுறையினர் மத்தியிலும் பெருமளவு விரும்பப்படுபவர்களாக அமைந்துவிடுகின்றனர்.” என்றார்.

கருணாரட்ன மற்றும் அவரின் மாணவர்கள் பற்றிய உருக்கமான வீடியோவை யூனியன் அஷ்யூரன்ஸ் தமது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தது. இதற்கு பெருமளவு வரவேற்பும் ஆதரவும் கிடைத்திருந்தது. இவ்வாறான உத்வேகமான நபர்களை இனங்காண்பதில் நிறுவனம் தொடர்ந்தும் தம்மை அர்ப்பணித்துள்ளதுடன், சமூகத்துக்கான தமது பங்களிப்பை வழங்குவதிலும் கவனம் செலுத்துகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X