2021 ஒக்டோபர் 17, ஞாயிற்றுக்கிழமை

பஸ்ஸை ஓட்டிச் சென்று குடும்பத்தை பார்த்தவர் கைது

Editorial   / 2021 மே 12 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் கொரோனாத் தொற்றானது தீவிரமடைந்து வருகின்றது.

இதன் காரணமாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த தினூப் என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்ப்பதற்கு  ஊருக்குச் செல்ல (270 கி.மீ தூரம்) முயற்சி செய்துள்ளார்.

எனினும் ஊரடங்கு காரணமாகப் பொது போக்குவரத்து இல்லாமல் இருந்துள்ளது.

இந்நிலையில் அருகிலிருந்த தனியார் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததை பார்த்த அவர் அதை இயங்கியுள்ளார்.

இதன்போது  பெற்ரோல் முழுமையாக நிரப்பப்பட்டிருப்பதை உணர்ந்த அவர் பஸ்ஸை எடுத்துக் கொண்டு தனது ஊருக்கு விரைந்துள்ளார்.

இந்நிலையில் வழியில் பொலிஸார் அவரை மறித்து விசாரித்ததில் அவர் பஸ்ஸை திருடியமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பஸ் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .