2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

’உணவுப் பொருள்களை வழங்குவோர் தொடர்புகொள்ளவும்’

Niroshini   / 2021 ஜூன் 20 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

பொதுமக்கள் அனைவருக்கும், உணவுப் பொருள்கள் கிடைக்க வேண்டுமெனத் தெரிவித்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ந.கேதினி, உணவுப் பொருள்களை வழங்க வருபவர்கள், கிராம அலுவலருடன் தொடர்புகளை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், உணவுப் பொருள்கள் ஒழுங்கின்றி விநியோகிக்கப்படுவதன் காரணமாக, பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன என்றார்.

சில குடும்பங்களுக்கு இரு தடவைகள் கூட உணவுப் பொருள்களைப் பெற்றுள்ள நிலையில், சில குடும்பங்கள் உணவுப் பொருள்களையே பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றதெனவும், அவர் சாடினார்.

தனது வட்டாரமான விசுவமடுவில், கிராம அலுவலரின் ஒழுங்குபடுத்தலில், அனைவருக்கும் பொருள்கள் கிடைக்கக் கூடிய வகையில் ஒழுங்குகள் செய்யப்பட்டாலும், உணவுப் பொருள்களைக் கொண்டு வருபவர்கள் குறைவாக காணப்படுவதாகத் தெரிவித்த அவர், இதன் காரணமாக பல குடும்பங்கள் உணவுப் பொருள்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றதெனவும் கூறினார்.

'எனவே, உணவுப் பொருள்களை வழங்க வருபவர்கள், கிராம அலுவலருடன் தொடர்புகளை ஏற்படுத்தி, உணவுப் பொருட்களை வழங்கினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் உணவுப் பொருள்கள் சென்றடையும். அவ்வாறு இல்லாமல், தன்னிச்சையாக உணவுப் பொருள்களை வழங்கினால், உண்மையான நிலைவரப்படி உணவுப் பொருள்கள் சென்றடையாது' எனவும், ந.கேதினி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .