2021 ஒக்டோபர் 23, சனிக்கிழமை

காலி மீன்பிடி துறைமுக மீனவர் திடீர் மரணம்

Kogilavani   / 2020 ஒக்டோபர் 24 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த மீனவரொருவர், திடீரெனெ ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, இன்று  (24) காலை உயிரிழந்துள்ளார் என்று, காலி துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

துறைமுக வளாகத்தில் நின்றுக்கொண்டிருந்த போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் உடனடியாக அவரை கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தப்போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று, துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். 

பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X