2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

4,200 ஒக்ஸி மீட்டர்கள் சிக்கின

Editorial   / 2021 செப்டெம்பர் 08 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜீ.கபில்

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட 4,200 ஒக்ஸ் மீட்டர்கள் சுகங்க அதிகாரிகளால் செப்டெம்பர் 6ஆம் திகதி கைப்பற்றப்பட்டது.

21 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டிருந்த அந்த ஒக்ஸி மீட்டர்களின் உள்ளூர் சந்தை பெறுமதி 23 இலட்சத்து 44 ஆயிரத்து 642 ரூபாயாகும்.

அந்த ஒக்ஸி மீட்டர்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு இலங்கை ஒளடத ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் அனுமதி வெறப்படவில்லை என்பதி விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.சுங்கத்துக்கு இறக்குமதி தீர்வையும் செலுத்தப்படவில்லை.

அந்தப் பொருள்களை ​கொண்டு செல்வதற்கு வந்திருந்தவர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளமை தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட அவர், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (07) ஆஜர்படுத்தப்பட்டார்.  அவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .