2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த சுவீடன் பிரதமர்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 21 , பி.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு ஒன்றில் சுவீடன் பிரதமர் ஸ்டியஃபான் லூஃபியன் தோல்வியடைந்துள்ளார்.

அந்தவகையில், பதவியிலிருந்து இராஜினாமா செய்து, புதிய அரசாங்கம் ஒன்றை கண்டுபிடிக்கும் அல்லது இடைத் தேர்தல் ஒன்றைக் கோரும் பணியை சபாநாயகரிடம் அளிப்பதற்கு பிரதமர் லூஃபியனுக்கு ஒரு வாரம் காணப்படுகிறது.

மத்திய இடதுசாரி அரசாங்கத்துக்கான ஆதரவை இடது கட்சி வாபஸ் பெற்றமையை அடுத்தே தேசியவாத சுவீடன் ஜனநாயகக் கட்சி பாராளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை கோர முடிந்திருந்தது.

புதிதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான வாடகைக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பிலேயே மத்திய இடதுசாரி அரசாங்கத்துக்கான ஆதரவை இடது கட்சி வாபஸ் பெற்றிருந்தது.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பிரதமராக லூஃபியன் இருந்து வருகின்றார்.

349 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் பிரேரணை நிறைவேறுவதற்கு 175 வாக்குகள் தேவை என்ற நிலையில், 181 பாராளுமன்ற உறுப்பினர்களால் பிரேரணை ஆதரிக்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .