2021 ஜூலை 28, புதன்கிழமை

செயலியைப் பயன்படுத்தி 200 குற்றவாளிகள் கைது

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 08 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று ஆண்டுகள் நடவடிக்கை ஒன்றில் உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக சட்ட அமுலாக்க முகவரகங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கியு அமெரிக்காவின் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகத்தால் (எஃப்.பி.ஐ) இயக்கப்பட்ட பாதுகாப்பான ஒரு தகவல் பரிமாற்ற செயலி ஒன்றைப் பயன்படுத்தியே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா, எஃப்.பி.ஐ-ஆல் இணைந்து மேற்கொள்ளப்பட்ட குறித்த நடவடிக்கையில் அனோம் செயலியானது குற்றவாளிகள் இடையே இரகசியாமாக விநியோகிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், அவர்கள் அறியாமலே அவர்களின் கலந்துரையாடல்களை பொலிஸ் கண்காணிக்க முடிந்துள்ளது.

இந்நிலையில், 18 நாடுகளில் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புபட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்களுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்களும் உள்ளடங்குகின்றனர்.

போதைப்பொருள்கள், ஆயுதங்கள், பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

224 பேரைக் கைது செய்ததுடன், 20 கொலை செய்யும் ஆபத்துகளில் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இந்நிலையில், 35 பேரை நியூசிலாந்து கைது செய்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .