2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

கொரோனாத் தடுப்பூசியைச் செலுத்தினால் எய்ட்ஸ் வரும்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனாத்  தடுப்பூசியைச்   செலுத்திக் கொண்டால் எய்ட்ஸ்  நோய் ஏற்படும் என பிரேஸில் ஜனாதிபதி  ஜெய்ர் பொல்சொனாரோ  ( Jair Bolsonaro) தெரிவித்த  கருத்து உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டுமென்றால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என உலக நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன .

எனினும் பிரேஸில் ஜனாதிபதி  ஜெய்ர் பொல்சொனாரோ  முகக் கவசம் அணியத் தேவையில்லை என்றும்,   கொரோனாத்  தடுப்பூசி செலுத்துவது அவசியமற்றது எனவும் தெரிவித்து வந்தார். 

இந்நிலையில் கொரோனாத்  தடுப்பூசியைச்   செலுத்திக் கொண்டால் எய்ட்ஸ்  நோய் ஏற்படும் என அவர் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

அத்துடன் இது குறித்து உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இது குறித்த வீடியோவானது  பேஸ்புக்கில் வைரலாக அதனை பேஸ்புக் நிறவனம் நீக்கியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X