2022 ஜனவரி 22, சனிக்கிழமை

அகதிகள் மீது நாயை விட்டு கடிக்க வைத்த பாதுகாப்புப் படை

Ilango Bharathy   / 2021 நவம்பர் 19 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிதுவேனியாவின் எல்லையில் உறங்கிக் கொண்டிருந்த அகதிகளை நாயை விட்டு கடிக்க வைத்தும் , கற்களை வீசியும் அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  ஈராக்கை விட்டு வெளியேறியவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் தஞ்சமடையும் முயற்சியாக லிதுவேனியா, பெலாரஸ் நாடுகள் எல்லையில் முகாமிட்டுவருகின்றனர்.

 இந்நிலையில் கடும் குளிரில் இருந்து தப்பிக்க ஸ்லீப்பிங் பேங் எனப்படும் பைகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை லிதுவேனியா படையினர் தாக்கும் வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இதனையடுத்து லிதுவேனியா படையினரின் மீது பல்வேறு தரப்பிலான மக்கள் தமது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

எனினும் பையில் மனிதர்கள்  இருப்பது தெரியாது என்றும், நாய் கடித்ததில் அவர்களுக்கு  காயங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும்  குறித்த பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X