2022 ஜனவரி 22, சனிக்கிழமை

பொலிஸ் நிலையத்தில் நிர்வாணப்படுத்தப்பட்ட பெண்

Ilango Bharathy   / 2021 நவம்பர் 15 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட பெண் ஒருவரை, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மிரட்டி, நிர்வாணமாக்கி நடனம் ஆட வைத்த சம்பவம்  பாகிஸ்தானில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள குவெட்டா நகரிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று ” குழந்தை ஒன்று கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக குறித்த பெண்  அப்பகுதியில் இருந்த பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும், விசாரணையின் போது பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அப் பெண்ணை மிரட்டி ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கியதுடன், பாடல் ஒன்றை ஒலிக்கச் செய்து, அங்கிருந்தவர்கள் முன்னிலையில் நடனமாட வைத்தாகவும்  அதனை வீடியோ எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விடயம் இணையத்தில் வைரலாகவே குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட அவரது குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X