2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

எலோன் மஸ்க் மீது டுவிட்டர் வழக்கு

Ilango Bharathy   / 2022 ஜூலை 13 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலக பணக்காரர்களில் ஒருவரும்  டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன்  தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க் (Elon musk) அண்மையில் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார்.

ஆரம்பத்தில் 44 பில்லியன் டொலர்கள் கொடுத்து டுவிட்டரை வாங்க சம்மதம் தெரிவித்த எலோன் மஸ்க், பின்னர்  ஒப்பந்தத்தின் படி போலி கணக்குகள் குறித்தத்  தரவுகளை டுவிட்டர்  நிறுவனம் வழங்கவில்லை எனக் கூறி டுவிட்டரை வாங்கும் முடிவில் இருந்து அண்மையில்  விலகுவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஒப்பந்தத்தில் அனுமதித்த தொகைக்கு டுவிட்டரை வாங்க எலான் மஸ்கிற்கு உத்தரவிடுமாறு அந்நிறுவனம் அமெரிக்காவின் டெலவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .