2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

கிம் ஜொங் உன்னின் மாதிரி

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 15 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடகொரிய ஜனாதிபதி  கிம் ஜொங் உன்னின்  (Kim Jong-un) தலைமுடியைப்போன்று தனக்கும் சிகையலங்காரம் செய்ய வேண்டும் என்று சலூன் கடைக்காரரிடம் இளைஞர் ஒருவர் கேட்கும் வீடியோ வொன்று அண்மைக்காலமாக சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

குறித்த  இளைஞர் அவ்வாறு சலூன்கடைக்காரரிடம்  கேட்டபோது அவர் முதலில்  முடியாது எனக்கூறியதாகவும், பின்னர் மனம்மாறி, வடகொரிய ஜனாதிபதியின் தலைமுடியை போன்று , அந்த நபருக்கு சிகை அலங்காரம் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய தோற்றத்தை கண்ணாடியில் பார்த்த இளைஞனும் சலூன்கடைக்காரரும் வாய்விட்டு சிரிக்கும் வீடியோவொன்று  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


எனினும் இவ்வீடியோவானது எப்போது எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவிலை என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .