2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

ஊழல் எதிர்ப்புப் போராட்டத்திற்கு வெற்றி ; உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் அன்னா ஹஸாரே

Super User   / 2011 ஏப்ரல் 09 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் பிரதமர் உட்பட அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஊழல்களை விசாரிப்பதற்கான லோக்பால் சட்ட மூலம் தொடர்பாக 98 மணித்தியாலங்களாக உண்ணாவிரதம் மேற்கொண்ட காந்தியவாதியான அன்னா ஹஸாரே இன்று சனிக்கிழமை தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

இந்திய அரசாங்கம் முன்வைத்த லோக்பால் சட்டமூலத்தால் எந்தப் பயனும் இல்லையெனவும் அது தொடர்பாக மீளாய்வு செய்வதற்கான குழுவில் அரசாங்கப் பிரதிநிதிகள் 50 சதவீதமானோருடன் மக்கள் பிரதிநிதிகள் 50 சதவீதமானோரும் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி 73 வயதான அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் மேற்கொண்டுவந்தார்.

அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக இந்திய மத்திய  அரசு அறிவித்ததையடுத்து அன்னா ஹஸாரே இன்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பட்டாசுகொளுத்தி, தேசாபிமான பாடல்களை பாடிய நிலையில் எலுமிச்சை சாறு அருந்தி அவர் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.
எனினும் 'எமது போராட்டம் இங்கு முடிந்துவிடவில்லை. உண்மையான போராட்டம் இப்போதுதான் ஆரம்பமாகிறது' என அன்னா ஹஸாரே கூறினார்.

இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளில் ஒன்றாக ஊழல் காணப்படுகிறது. கடந்த வருடம் நடைபெற்ற பொதுநலவாய போட்டிகள் மற்றும் 2008 ஆம் ஆண்டு 2 ஜி வானொலி அலைவரிசை கற்றை அனுமதிப் பத்திரம் வழங்குவதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல்கள் தொடர்பாக  விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஊழலுக்கு எதிராக சக்திவாய்ந்த விசாரணைக் குழு அமைப்பதை வலியுறுத்தி அன்னா ஹஸாரே மேற்கொண்ட உண்ணாவிரதத்திற்கு இந்திய ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக ஆதரவளித்தன. இப்போராட்டத்திற்கு ஆதரவாக மும்பை, பெங்களூர் மற்றும் ஏனைய நகரங்களில் 24 மணித்தியாலங்களில்  5 லட்சத்திற்கும் அதிகமான கையெழுத்துகள் பெறப்பட்டன.

அமீர்கான் உட்பட பொலிவூட் திரையுலக பிரமுகர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர். இந்திய வர்த்தக, கைத்தொழில் சம்மேளனமும் அன்னாவுக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • xlntgson Tuesday, 12 April 2011 09:27 PM

  காந்தியம் இறந்து விட்டனர் என்றனர்
  அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்றனர்.இப்போது அன்னாவை பயப்படுகின்றனர்.
  அன்னா வாழ்க,
  உங்கள் ஆரம்பம் நல்ல ஆரம்பமே!
  அஹிம்சை ஆண்மையற்றதாகக் காட்டப்படும் காலத்தில் அணுவாயுதத்தையும் எதிர்கொள்ள சாகத்துணிந்த- ஆயுதம் தாங்காதவர்களாலேயே முடியும் என்பது நிரூபணமாகிறது.
  வயது போனவர்கள் என்று நிராகரிக்க இயலாது,
  பழைமை வாதம் என்றும் நிராகரிக்க இயலாது.
  அஹிம்சாவாதம் எக்காலத்துக்கும் பொருந்தும்
  ஆயுதப்போராட்டம் மேலும் ஆயுதப் போராட்டத்துக்கே வழி வகுக்கும், ஆயுதம் ஒழிக!

  Reply : 0       0

  xlntgson Wednesday, 13 April 2011 09:04 PM

  அவரது கோரிக்கை நிறைவேறினாலும் அவ்வாறான சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேறி அதை நிறைவேற்றப் போகும் அதிகாரிகள் தாக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்வது யாருடைய பொறுப்பு?
  ஒரு சூட்டுச்சத்தத்துக்கு குருவிகள் போல் ஓடி மறையும் மக்கள் அக்காலத்தில் இருந்து இருந்தால் இந்தியாவில் சுதந்திரம் வந்திருக்குமா?
  இப்போது உண்பது உடுப்பது எல்லாம் சோபனமாக இருப்பதால் ஆடை அழுக்காகி விடும் என்று தரையிலும் அமரமாட்டார்கள்! நட்சத்திர ஓட்டல்களில் வைக்காவிட்டால் நிகழ்ச்சிகளை ரத்து செய்து விடுவர்!
  மது பரிமாறப்படாத நிகழ்வுகள் அரிது!

  Reply : 0       0

  xlntgson Wednesday, 20 April 2011 09:18 PM

  நரேந்திர மோடியைப் புகழ்ந்து இருக்கின்றார், பின்னர் அவரது மத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு என்று கூறி இருக்கின்றார், இப்போது காலக்கெடுவையும் தளர்த்தி இருக்கின்றார். நான் கூறியதைப் போல் அஹிம்சாவாதம் பயனளிக்காது என்பவர்களுக்கு இரை ஆவாரோ?
  ராகுல் காந்தியும் விளம்பரத்துக்காக ஊழல் மோசடி என்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவேண்டாம் என்கிறார், பார்க்கப் போனால் மிக சிக்கலான பிரச்சினை தான் இது.
  இந்திய தேர்தல் சட்டம் ஏழைகளுக்கு தேர்தலில் நிற்க வழி செய்யவில்லை போல் தெரிகிறது ஒருவேளை இந்த மசோதாவை எல்லாரும் எதிர்ப்பரோ?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .