2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

30 நிமிடங்கள் மாத்திரமே உறங்கும் இளைஞர்

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானைச்  சேர்ந்த தைசுகே ஹோரி எனும் இளைஞர் கடந்த 12 ஆண்டுகளாக நாளொன்றுக்கு  30 நிமிடங்கள் மாத்திரமே  உறங்குவதாக வெளியான செய்தி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

36 வயதான குறித்த இளைஞர் இது குறித்துக் கூறியதாவது”இவ்வாறு உறங்குவதால்தான்  மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கின்றேன். மேலும், தூங்கும் நேரத்தை எப்படிக் குறைப்பது என்பது  குறித்து நூற்றுக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்தும் வருகின்றேன்.

எல்லாரையும் போன்று ஆரம்பத்தில்   நானும் 8 மணி நேரம் தூங்கிக்கொண்டுதான்  இருந்தேன். ஆனால் இதனால் என்னுடைய பல வேலைகள்பாதிப்படைந்தன. எனவே தூங்கும் நேரத்தைக் குறைக்கத் தொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குகிறேன். சில நாட்களில் அரை மணி நேரத்துக்கும் குறைவாகக்கூட தூங்குகிறேன். இதனால் உடல் ரீதியாக எந்த பாதிப்பும் எனக்கு ஏற்படவில்லை ”எனத் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X