2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

’’ பெருநாள் பரிசு ’’ குறும் திரைப்படம் வெளியீடு

Editorial   / 2018 ஜூலை 04 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

.எல்.எம்.ஷினாஸ்

தென்கிழக்கு கலை கலாசார அமையத்தின் தயாரிப்பில் உள்ளூர் கலைஞர்களின் நடிப்பில் '' பெருநாள் பரிசு '' எனும் குறும் திரைப்படம் சாய்ந்தமருது கமு/ றியாளுள் ஜன்னா வித்தியாலயத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) வெளியிடப்பட உள்ளது.

13 கதா பாத்திரங்களுடன் 30 நிமிடம்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ள இத் திரைப்படம் அன்றய தினம் பிற்பகல் 4.30 தொடக்கம் இரவு 10.30 மணிவரை காட்சிப்படுத்த உள்ளதாக ஏட்பாட்டாலர்கள் தெரிவிக்கின்றனர். 

தென்கிழக்கு கலை கலாசார அமையத்தின் ஆறாவது வெளியீடாக வெளியிடப்படவுள்ள இக் குறும் திரைப்படத்தை எ. சாஹிர் கெமரா மற்றும் எடிட்டிங் செய்துள்ளதுடன், எம்.எச்.எம் ஹிஜாப் எழுத்து மற்றும் இயக்கியும் உள்ளனர்.

இக்குறும் திரைப்படத்தின் முக்கிய பாத்திரங்களை அஸ்வான், சுல்பிகா, சர்மில், சாஹிர், ரிஸான், சாகிர் கரீம், றினோஸ், புஹாரி, நபார், ரஸ்மிர், புகார்த்தீன், அனாபா மற்றும் அம்ரினா ஆகியோர் ஏற்றும் நடித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X