2022 ஜனவரி 22, சனிக்கிழமை

நூல் வெளியீடு

Editorial   / 2018 ஜனவரி 19 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்  

மூதூர் எம்.எஸ்.அமானுல்லா எழுதிய “ஒரு பெண்ணின் கதை” நூல் வெளியீட்டு விழா, தி/மூதூர் மத்திய கல்லூரி மண்டபத்தில், நாளை (20) காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது.  

பிரதி பிரதம செயலாளர் எம்.சீ.எம்.செரீப் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், வரவேற்புரையை ஏ.நயிமுதீனும் அறிமுக உரையை ஓய்வுபெற்ற அதிபர் ஏ.எஸ்.உபைத்துல்லாவும், நூல் நயவுரையை கிண்ணியா ஏ.எம்.எம்.அலியும், நூல் விமர்சன உரையை ஏ.எஸ்.பௌசியும் (திலிப்) ஆற்றவுள்ளனர்.   

நூலின் முதற் பிரதியை, சட்டத்தரணி எம்.எஸ்.நயீம், எம்.ஏ.சீ.சமீம் ஆகியோர் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X