2022 ஜனவரி 22, சனிக்கிழமை

நூல் வெளியீடு

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சரும் அரசியல் ஆய்வாளருமான கந்தையா சர்வேஸ்வரன் எழுதிய “இலங்கைத் தமிழ் அரசியல் இன மோதலும் மிதவாதமும்” எனும் நூல் வெளியீடு, நல்லூர் துர்க்கா தேவி மணி மண்டபத்தில் வௌ்ளிக்கிழமை (19) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன், சிறப்பு விருந்தினர்களாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், நூல் அறிமுக உரையை அரசியல் ஆய்வாளர் நிலாந்தனும், நூல் மதிப்பீட்டுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசியல்துறைத் தலைவர் கே.ரீ.கணேசலிங்கமும், ஏற்புரையை நூலாசிரியர் சர்வேஸ்வரனும் வழங்கவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X