2023 ஜூன் 07, புதன்கிழமை

நூல் வெளியீடு

Kogilavani   / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

மலையகத்தின் மூத்த எழுத்தாளர் மொழிவரதனின் 'பேனையை கீழே வைத்து விடாதே' கவிதை நூல் வெளியீட்டு விழா, கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், நுவரெலியா லிந்துலை பிரதேச வேல்ட்விசன் முகாமையாளர் எஸ்.எம்.ஜுட் தவராஜா கலந்துகொண்டு நூலை வெளியிட்டு வைத்தார்.

மூத்த எழுத்தாளர் கலாபூசனம் மு.சிவலிங்கம் தலைiமை உரைiயும் எம்.எச்.எம்.ஜவ்பர் விமர்சன உரையையும் வழங்கினர்.

கருத்துரைகளை முறையே ஸ்ரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதி வ.செல்வராஜா, மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி சிவ.ராஜேந்திரன், பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்திக்கான பணிப்பாளர் சு.முரளிதரனும் வழங்கினர்.

ஏற்புரையை நூலாசிரியர் சி.மகாலிங்கம் (மொழிவரதன்) ஆற்றினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .