Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஒக்டோபர் 05 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
செவ்வாய்க்கிழமை (04) மாலை இரவு வெளியாகிய 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் 170 மாணவர்கள் வெட்டுப்புள்ளியைக் கடந்துள்ளனர்.
யாழ்.மாவட்டத்தின் வெட்டுப்புள்ளி 152 புள்ளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில், 254 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதுடன், அவர்களில் 170 பேர் வெட்டுப் புள்ளிகளைக் கடந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 284 பேர் பரீட்சைக்குத் தோற்றியதுடன், அவர்களில் 140 மாணவர்கள் வெட்டுப்புள்ளியைக் கடந்துள்ளனர்.
வவுனியா இறம்பைக்குளம் மகா வித்தியாலய மாணவன் கோகுலதாசன் அபிசிகன் 195 புள்ளிகளைப் பெற்று வடமாகாணத்தில் முதலிடத்தில் உள்ளார்.
யாழ்.மாவட்டத்தில், யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் உமாசங்கர் ஜயனி 194 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .