2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘மாகாண சபைத் தேர்தலை புதிய முறைமையில் நடத்த வேண்டாம்’

Editorial   / 2018 ஜூலை 05 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபைத் தேர்தலை புதிய முறையின் கீழ் நடத்தில், முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாகி நடுத் தெருவுக்குச் செல்லும் நிலை ஏற்படுமென எச்சரிக்கை விடுத்த சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய பிரதியமைச்சர் பைஸல் காஸிம், அத்தேர்தலை புதிய முறைமையின் கீழ் நடத்த வேண்டாமென்றும் தற்போதுள்ள முறைமையின் கீழே நடத்த வேண்டுமென்றும் தாம் அரசாங்கத்தை வலியுறுத்துவதாகத் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டு வருகின்றமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்; உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிந்த கையோடு மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்ற கோஷம் முன்வைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

புதிய முறைமை முஸ்லிம்களுக்குப் பேராபத்தைக் கொண்டுள்ளமையால். இந்த ஆபத்தான புதிய முறைமையை  ஒருபோதும் தம்மால் ஆதரிக்க முடியாதெனத் தெரிவித்த அவர், இந்தப் புதிய முறையை அதிகம் விரும்புவது ஜே.வி.பிதான் என்று தெரிவித்தார்.

ஜே.வி.பியினர் அவர்களின் அரசியல் நலன்களை அடிப்படையாகக் கொண்டே இதற்கு ஆதரவு வழங்குகின்றனர் என்றும் தோல்வியடைகின்ற கட்சிக்கு புதிய முறைமை அதிக நன்மைகளை வழங்குமென்றும் குறிப்பிட்ட அவர், இது ஜே.வி.பிக்கே பொருத்தமான முறைமையாக அமையுமென்றும் கூறினார்.  

புதிய உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறைமை எப்படி வென்ற கட்சியை தோல்வியடைந்த கட்சியாக மாற்றி தோல்வியடைந்த கட்சியை வெற்றிபெறச் செய்ததோ, அதேபோன்றதொரு ஆபத்தான நிலைமையையே புதிய மாகாண சபை முறைமையும் செய்யுமென்றும் அவர் எச்சரித்தார். அத்துடன், இது உண்மையில் பெரும் அநீதியாகுமென்றார்.

இந்த விவகாரம் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கட்சி பேதமின்றி ஆபத்தில் தள்ளுகின்ற ஒன்றாக இருப்பதால் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே அணியில் நின்று புதிய முறைமையை எதிர்க்க வேண்டுமெனக் கூறிய பிரதியமைச்சர், எமது அரசியல் பிரதிநிதித்துவத்தை தக்க வைப்பதன் ஊடாக எமது அரசியல் உரிமையைப் பாதுகாக்க வேண்டுமென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X