2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எஸ்.எஸ்.சி அணிக்கெதிராக கன்னிச் சதம் பெற்ற மொஹமட் சமாஸ்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 31 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.எம். அறூஸ்

சிங்கள விளையாட்டுக் கழகத்துக்கெதிரான (எஸ்.எஸ்.சி) முதல்தர ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மூர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் விக்கெட் காப்பாளரான மொஹமட் ஷமாஸ் 111 ஓட்டங்களைப் பெற்று தனது கன்னிச் சதத்தைப் பெற்றுள்ளார்.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் 20 வயதுடைய ஷமாஸ், 116 பந்துகளை எதிர்கொண்டு 14 நான்கு ஓட்டங்கள், 2 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 111 ஓட்டங்களைப் பெற்றார்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மூர்ஸ், 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 295 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு, 296 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய எஸ்.எஸ்.சி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 290 ஓட்டங்களையே பெற்று ஐந்து ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

கொழும்பு சாஹிரா கல்லூரியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரராகவும், விக்கெட் காப்பாளராகவும் இருந்த ஷமாஸ் இலங்கை 19 வயதுக்குட்பட்ட தேசிய அணியில் விளையாடிய வீரராவார்.

கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய இலங்கை அணியில் இடம்பெற்ற ஷமாஸ் நைஜீரிய அணிக்கெதிரான போட்டியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி 56 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதேபோன்று இலங்கை வந்த அவஸ்திரேலிய அணிக்கெதிராகவும் மிகச்சிறப்பாக விளையாடி 77 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுடன், பங்களாதேஷுக்குச் சென்ற இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியிலும் இடம்பெற்றார்.

கடந்த 2016ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் தொடரில் இலங்கை 15 வயதுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட ஷமாஸ், பங்களாதேஷ் அணிக்கெதிராக அரைச்சதத்தைப் பெற்று தனது ஆரம்பத்தையே அமர்க்களப்படுத்தியிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .