2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

Missed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்

J.A. George   / 2021 ஜனவரி 25 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் உள்ள Pay-TV தொலைக்காட்சி சேவைகளின் வரலாற்றில் முதன்முறையாக, இலங்கையின் முன்னணி Pay-TV வலையமைப்பான டயலொக் டெலிவிஷன்  ஒரு தனித்துவமான அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன்  இது வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு மொபைல் போன் வலையமைப்பிலும் இருந்து  தங்களுக்கு விருப்பமான எந்தவொரு தனி அலைவரிசையினையும் அல்லது அலைவரிசை பக்கேஜினையும் இலகுவாக missed call  மூலம் செயல்படுத்த உதவுகிறது

இந்த புதிய சேவையுடன் வாடிக்கையாளர்கள் தங்களது டயலொக் டிவி கணக்கு பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்தில் இருந்து  ஒரு மிஸ் கோலினை ஏற்படுத்துவதன் மூலம்  தங்களுக்கு விருப்பமான அலைவரிசையினை  அல்லது அலைவரிசை  பக்கேஜினை  எளிதாக செயல்படுத்த முடியும். டயலொக் மொபைல் இலக்கத்துடன்  பதிவு செய்யப்பட்ட டயலொக் டிவி வாடிக்கையாளர்கள் 0760079XXX க்கு மிஸ் கோல் கொடுத்து தங்களுக்கு விருப்பமான அலைவரிசையினை செயற்படுத்திக்கொள்ளலாம். 

இந்த சேவையைப் பெறுவதற்கு, நீங்கள் செயற்படுத்த விரும்பும் அலைவரிசையின் கடைசி 3 இலக்கங்களை ‘xxx’ க்கு மேலே குறிப்பிட வேண்டும் மற்றும் 100 க்கும் குறைவான எண்களில் ஆரம்பமாகும் அலைவரிசைகளை செயற்படுத்தும் போது அலைவரிசை இலக்கத்திற்கு முன் பூஜ்ஜியத்தை பதிவு செய்ய வேண்டும்.

உதாரணமாக, ஒரு டயலொக் டிவி வாடிக்கையாளர் தங்கள் அலைவரிசை பட்டியலில்   Ten Cricket (அலைவரிசை இலக்கம் 69) அலைவரிசையினை செயல்படுத்த விரும்பினால் 0760079069 க்கு மிஸ் கோலினை கொடுத்து இந்த அலைவரிசையினை செயற்படுத்தக்கொள்ளக்கூடியதுடன், அலைவரிசை பக்கேஜ்களை செயற்படுத்த இதே முறையினையே  பின்பற்ற வேண்டும். செயல்படுத்தப்பட்ட அலைவரிசை பட்டியல்களுக்கான  மாதாந்த  கட்டணம் வாடிக்கையாளரின் கட்டணத்துடன்  இணைக்கப்படும்.

டயலொக் டெலிவிஷனின் வியாபார பிரிவு தலைவர் சிரந்த டீ  சோய்சா கருத்து தெரிவிக்கையில் "வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பப்படி ஒரு அலைவரிசையினை அல்லது அலைவரிசை பக்கேஜினை இலகுவாக  மிஸ் கோலின் மூலம்  செயற்படுத்த சமீபத்திய எளிதான முறையை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இலங்கையில் முதன்முறையாக. வாடிக்கையாளருக்கு அவர்கள் எதைப் பார்க்க விரும்புகிறார்கள் என்பதையும், பார்க்கும் அனுபவத்தின் கால அளவையும் தீர்மானிக்க முழு சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளதுடன்  இது ஒரு அலைவரிசையை  மிகவும் எளிதாகவும் எந்த இடையூறும் இல்லாமல் செயல்படுத்தும் அனுபவத்தை அவர்களுக்கு வழங்குகிறது” என தெரிவித்தார்.

வாடிக்கையாளர்கள் 1777 க்கு அழைப்பினை ஏற்படுத்தவதன் மூலம் பதிவு செய்த தொலைபேசி இலக்கத்தை  புதுப்பித்துக்கொள்ளலாம். மிஸ் கோல் சேவையின் மூலம் உங்களுக்கு விருப்பமான அலைவரிசையினை செயற்படுத்திக்கொள்ளக்கூடியதுடன்   நீங்கள் SMS ஊடாக  679 க்கு அழைப்பினை ஏறபடுத்தி  உங்களுக்கு பிடித்த அலைவரிசையினை எங்கள் குரல் சேவை (IVR) மூலமும்  MyDialog App அல்லது dialog.lk ஊடாகவும் செயல்படுத்தலாம்.

மிஸ் கோல் சேவையின் மூலம் விரும்பிய அலைவரிசையினை  செயல்படுத்த, வாடிக்கையாளரின் டயலொக் டெலிவிஷன் கணக்கு செயற்படும் நிலையில்  இருக்க வேண்டும் என்பதும்  போதுமானளவு கணக்கு மிகுதியும் காணப்படுதல் வேண்டும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .