Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Editorial / 2020 ஜூலை 22 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். புது வேலை கிடைக்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நன்மை கிட்டும் நாள்.
ரிஷபம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். தைரியம் தரும் நாள்.
மிதுனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அரைகுறையான வேலைகள் உடனே முடியும். தோற்ற பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.
கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.
சிம்மம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. லேசாக தலை வலிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
கன்னி: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். புது பொருள் வந்து சேரும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.
துலாம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உறவினர்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.
தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் இனம் தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.
மகரம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். மகிழ்ச்சியான நாள்.
கும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். அமோகமான நாள்.
மீனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
35 minute ago
48 minute ago
1 hours ago