2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்

Freelancer   / 2021 ஜூலை 13 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

2012 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து  ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை இறக்குமதி செய்த விஜய்  அந்த காருக்கான நுழைவு வரி விதிக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் அங்கு இறக்குமதி செய்வதற்காக  ஒரு வரி செலுத்தப்பட்ட நிலையில் இங்கு வந்து மீண்டும் நுழைவு வரி விதிப்பது என்பது  ஏற்றுக்கொள்ள முடியாதது  என்றும், காருக்கான நுழைவு வரி விதிக்காத காரணத்தினால் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யமுடியவில்லை இதனால் இந்த காரை பயன்படுத்த முடியாமால் உள்ளேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய்  அபராதம் விதித்திருக்கிறது.

இந்த  அபராத தொகையை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தமிழகத்தை பொறுத்த வரையில் நடிகர்கள் நாடாளும் அளவிற்கு வளர்ந்துள்ள நிலையில் அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது என்று நீதிபதி எஸ் எம் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் #வரிகட்டுங்க விஜய் என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி  வருகிறது.

வரி கட்ட முடியாது போடா என்கிற வாசகம் அணிந்த டிசர்டை விஜய் அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தையும்  வெளியிட்டுள்ளனர்.

M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X