2025 நவம்பர் 12, புதன்கிழமை

நடிகர் அஜித் வீட்டில் பரபரப்பு: காவல்துறை தீவிரச் சோதனை

Editorial   / 2025 நவம்பர் 12 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

சென்னை: கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) உள்ள பிரபல நடிகர் அஜித்குமாரின் இல்லத்திற்கு அடையாளம் தெரியாத நபர் தொலைபேசி மூலம் விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இந்தத் தகவலை அடுத்து, உடனடியாக நடிகர் அஜித்குமாரின் இல்லத்தைச் சுற்றிலும் ஏராளமான காவல்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டனர். மேலும், மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவின் உதவியுடன் வீடு முழுவதும் தீவிரச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல், நடிகர் எஸ்.வி. சேகர், நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோரது வீடுகளுக்கும், சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கும் (காங்கிரஸ் கட்சி அலுவலகம்) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அங்கும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு, சோதனை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X