2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

அக்சயகுமாருடன் பணிபுரிந்த 45 பேருக்கு கொரோனா

J.A. George   / 2021 ஏப்ரல் 05 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல ஹிந்தி நடிகரும் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’2.0’ என்ற திரைப்படத்தில் நடித்தவருமான அக்ஷய்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து அவர் தன்னைதானே வீட்டில் தனிமைப்படுத்திகொண்ட நிலையில்,  தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கோரியிருந்தார்.

இந்த நிலையில் அக்ஷய் குமாருடன் தொடர்பில் இருந்த 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்ஷய்குமார் அண்மையில் ’ராம் சேது’ என்ற திரைப்படத்தில் பணியாற்றினார். அந்தத் திரைப்படத்தில் பணிபுரிந்த 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

அவர்களில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .