2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

சிம்புவின் தோற்றத்தை மாற்றிய கௌதம் மேனன்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 06 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, அடுத்ததாக இயக்குனர்  கௌதம் மேனனுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

மேலும் இப்படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கடந்த பெப்ரவரி மாதம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை திடீரென மாற்றி உள்ளனர். அதன்படி இப்படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ என புதிதாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் சிம்புவின் புதுவிதமான தோற்றம் அடங்கிய பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

ஏற்கனவே ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய சிம்பு - கௌதம் மேனன் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .