2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அமைச்சர் விஜித ஹேரத் - பிரபல நடிகர் ரவி மோகன் சந்திப்பு

Freelancer   / 2025 ஜூலை 19 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன், பாடகி கெனீஷா பிரான்சிஸ் மற்றும் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது இந்திய திரைப்படங்கள் ஊடாக இலங்கையின் சுற்றுலாத் தளங்களையும், வரலாற்று கதைகளையும் உலகம் முழுவதும் கொண்டு செல்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில்  அமைச்சர் விஜித ஹேரத், பிரபல நடிகர் ரவி மோகன், பாடகி கெனீஷா பிரான்சிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X