R.Tharaniya / 2025 டிசெம்பர் 07 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
2014-ம் ஆண்டு ‘மெட்ராஸ்' படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. ‘கதகளி', ‘கணிதன்', ‘கடம்பன்', ‘கதாநாயகன்',‘கலகலப்பு-2', ‘வந்தா ராஜாவா தான் வருவேன்', ‘நீயா-2' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
ஏராளமான தெலுங்கு படங்களிலும், ஒரு சில கன்னட-மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு சுந்தர் சி - வடிவேலு கூட்டணியில் உருவான ‘கேங்கர்ஸ்' படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ‘என்ட்ரி' கொடுத்தார்.
இதற்கிடையில் அவர் குத்துப்பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா' படத்தில் தான் அவர் கலக்கல் ஆட்டம் போடவுள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கேத்தரின் தெரசா தற்போது ‘பனி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.







9 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
1 hours ago