2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

விஜய்க்காக குரல் கொடுத்தாரா அஜித்

Editorial   / 2025 நவம்பர் 02 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரூர் சம்பவத்தை ஒருவர் மேல் மட்டும் பலி போட முடியாது ஒட்டுமொத்த மக்களின் அலட்சியமே காரணம் என தவெக தலைவர் விஜயை பற்றி மறைமுகமாக கூறியுள்ளார் அஜித்.

நாம் எல்லோரும் சேர்ந்து தான் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். ஒரு கிரிக்கெட் மேட்ச் நடக்கும்போது பல லட்சம் ரசிகர்கள் கூடுகின்றனர், ஆனால் இது போன்ற சம்பவங்கள் நடப்பதில்லை.

ஆனால்  சினிமாவை சேர்ந்த நடிகை, நடிகர்கள் கூட்டம் கூட்டினால் மட்டும் இது போன்ற இழப்புகள் ஏற்படுவது உலக அளவில் தமிழ் சினிமாவிற்கு பெரும் அவலத்தை ஏற்படுத்தி உள்ளது.

  "ஒரு நபர் மட்டும் போராடி முடிவு எடுக்க முடியாது. நாம் எல்லாரும் சேர்ந்துதான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” என்ற அவரது கருத்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அஜித், கரூர் விபத்திற்குப் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்ட விஜய் குறித்து சமநிலைமைக்கான நிலைப்பாட்டுடன் இணங்கும் வகையில் கருத்து வெளியிட்டிருக்கிறார். “உண்மையைச் சொல்ல மனசு தேவை!” என்று ரசிகர்கள் அஜித்தின் கருத்தை பெரிதும் பாராட்டுகின்றனர்.

ஒரு பிரபலமாக இருப்பதற்கும் மேலாக, ஒரு சாதாரண மனிதனாக, குடும்ப தலைவராக தனது வாழ்க்கையை நடத்த வேண்டும் என அஜித் பலமுறை கூறியுள்ளார். “எப்போதும் என்னுடன் ஷாலினி இருப்பதுதான் என் வலிமை” என அவர் பகிர்ந்த கருத்து, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

வாழ்க்கையில் வெற்றி, பெயர், புகழ் எதுவாக இருந்தாலும். அதன் பின்னால் நீங்கும் அன்பு, ஆதரவு தான் நம்மை உயர்த்திக்கொண்டு செல்கிறது என்பதைக் கூறும் அஜித்தின் வீடியோ தற்போது டிரெண்ட். மற்றொரு பக்கம், அஜித் தனது பைக் ரேசிங் ஆர்வத்தையும், சினிமா பயணத்தையும் சமநிலைப்படுத்த முயற்சி செய்து வருகிறார். “ரேசிங், நடிப்பு இரண்டையும் சமநிலைப்படுத்த முயற்சி செய்கிறேன்” என்ற அவர் கருத்து – ரசிகர்களை மேலும் கவர்ந்துள்ளது.

தற்போது சில வட்டாரங்களில் “AK64” படப்பிடிப்பு அறிவிப்பு வர இருப்பதாக பேசப்படுகிறது. இது ஜனவரிக்குள் வெளியாவதாகவும், ரேசிங் ஷூட் இடைவெளிகளில் அஜித் இணைந்து பணியாற்றுவதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல், AK65க்கான வேலைகள் மறைமுகமாக நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. மௌனமாக இருந்தாலும், தாக்கம் Thunder Level இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

விஜய் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களை மகாபலிபுரத்தில் சந்தித்து, நிதி உதவி, உறுதி மொழி வழங்கிய சம்பவம்... சமூகத்தில் பெரும் ஆதரவைப் பெற்றது. ஆனால் சமூக வலைதளங்களில் சிலர் இதை அரசியலுடன் இணைத்து “எதிர்மறை கோணத்தில்” பேச முயன்றதை பலரும் கண்டனம் செய்துள்ளனர்.

அஜித், இந்த விவகாரத்தில் தனது கருத்தை வெளிப்படையாகச் சொல்லாமல், மனிதநேய பார்வையில் பார்க்க வேண்டும் என்ற வகையில் முன்னுதாரணமாக அமைதியான பதிலை அனுப்பியுள்ளதாக ரசிகர்கள் கருத்து.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X