2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

புலிக்கு உதவிய தாய்க்கு சிறை

Editorial   / 2018 ஜனவரி 17 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் தற்கொலைக் குண்டுத்தாரிக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த தாயொருவரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், அவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்தது.  

அந்த சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக, தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராய்ச்சியே மேற்கண்டவாறு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.   

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவை, படுகொலை செய்வதற்கு, புலிகள் அமைப்பின் தற்​கொலை குண்டு தாரிக்கு உதவியளித்தாரென குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பெண்ணுக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய்க்கே, இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது.  

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள செல்வகுமார் சத்தியவேல் என்பவர், தண்டனை அனுபவிக்கவேண்டிய காலத்தை விடவும் கூடுதலான நாட்கள் சிறையில் இருந்துள்ளார் எனச் சுட்டிக்காட்டிய நீதிபதி, 15 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 24 மாதகால சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் தண்டத்தையும் விதித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X