2011-02-23 11.50pm
கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞன் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திற்கு 300 மீற்றர் முன்பாக கொக்குத்தொடுவாய் களப்பு கடலில் நேற்று முன்தினம் (07) இரவு தொழிலுக்கு சென்ற இளைஞன் நேற்று அதிகாலை தொழில் முடித்து மோட்டார் சைக்கிளில் திரும்பிய போது பின்பக்கமாகத் துரத்தி வந்து, கொக்குத்தொடுவாய் களப்பு கடலில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
மோப்ப நாய் சகிதம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் கொக்குத்தொடுவாய் வடக்கைச் சேர்ந்த ஜெயராஜ் சுபராஜ் என்ற 21 வயதுடைய இளைஞனே உயிரிழந்தவராவார். (a)