உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

2011-02-23 11.50pm


உருக்குலைந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (08) பகல் குச்சவெளி பொலிஸ் பிரிவின் திரியாயில் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்ட திருகோணமலை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் இச்சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இது தொடர்பிலான விசாரணைகளை குச்சவெளி பொலிஸாஏ  முன் எடுத்து வருகின்றனர்.

திரியாயை அண்மித்த கல்லறாவ கடற்கரைப் பகுதியில் வாடி அமைத்து மீன்பிடியில் ஈடுபடும் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் வெளியே சென்று இது வரை வாடிக்கு திரும்பவில்லை. அவர் வைத்தியசாலைக்கு செல்வதாக கூறி சென்றார்.

ஆனால் எந்த வைத்தியசாலையிலும் அவர் அனுமதிக்கப்பட்டதாக தகவல் இல்லை எனவும் அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.எனினும் காணமல் போனவர்தான் இங்கு  சடலமாக காணப்படுகின்றாரா என இதுவரை தகவல் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை என்று பொலிஸார் கூறினர். (a)