2011-02-23 11.50pm
கடுவெல, கொத்தலாவல, கெக்கிலிவெல வீதிப் பகுதியில் இன்று பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து முல்லேரியாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ய முயன்றபோது, அவர் வாளால் பொலிஸாரை தாக்க முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, தற்காப்புக்காக பொலிஸார் சந்தேகநபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் அவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
காயமடைந்த சந்தேகநபர் உடனடியாக முல்லேரியாவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கடுவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R