68 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 4 மணிவரை மண்சரிவு எச்சரிக்கை

2011-02-23 11.50pm


நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, ஆறு மாவட்டங்களில் உள்ள 68 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், இது செவ்வாய்க்கிழமை (16) மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும்.

இதன்படி கண்டி மாவட்டத்தின் உடதும்பர, டோலுவ, மெடதும்பர, கங்கஇஹல கோரள மற்றும் மினிபே ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மூன்றாம் நிலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளான உடுநுவ,  ஹதரலியத்த, அக்குறணை, கங்காவட கோரள, தெல்தோட்டை, பூஜாபிட்டிய, குண்டசாலை, பன்வில, யட்டிநுவர, ஹரிஸ்பத்துவ, உடபலத, தும்பனை, பாததும்பர, பாதஹெவாஹெட்ட,   ஆகிய 15 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பதுளை மாவட்டத்தில் பின்வரும் மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: ஊவா பரணகம, ஹப்புத்தளை, வெலிமடை, லுனுகல, சொரணதொட்ட, எல்ல, கந்தகட்டிய, பசறை, மீகஹகிவுல, ஹல்துமுல்ல, பதுளை, பண்டாரவளை, மற்றும் ஹாலி எல;

குருநாகல் மாவட்டம்: மல்லவப்பிட்டிய, ரிதீகம மற்றும் மாவத்தகம;

மாத்தளை மாவட்டம்: அம்பங்கங்க கோரல, வில்கமுவ, ரத்தோட்ட, லக்கல பல்லேகம, பல்லேபொல, உக்குவெல, யடவத்த, நாவுல

கேகாலை மாவட்டத்தில் தெஹியோட்விட்ட, மாவனெல்ல, வரகாப்பொல, புளத்கோஹுபிட்டிய, தெரணியகல, கேகாலை, அரநாயக்க, ரம்புக்கன, ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை மற்றும் கலிகமுவ, குருநாகல் மாவட்டத்தில் பொல்கஹவெல மற்றும் அலவ்வ,

நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை நோர்வூட், அம்பகமுவ கோரள, கொத்மலை மேற்கு மற்றும் கொத்மலை கிழக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் நிலை முதலாம் நிலை  அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை எச்சரிக்கை இன்று 16 ஆம் திகதி மாலை 4:00 மணி வரை அமலில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

நிலை 3 சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட இந்தப் பகுதிகளுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 150 மி.மீ.க்கும் அதிகமான மழை பெய்துள்ளதால், மழை தொடர்ந்தால் அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேலும் தெரிவித்துள்ளது.

இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது, முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. எனவே, மழை தொடர்ந்தால் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களை வலியுறுத்துகிறது.