2011-02-23 11.50pm
நோர்வூட் - ஓல்டன் தேயிலைத் தோட்டத்தின் கிங் கோரா பிரிவில் வசிக்கும் 36 வயதுடைய தோட்டத் தொழிலாளி ஒருவர் குளவி தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இவர் தனது வீட்டிற்கு குடிநீர் வழங்கும் உடைந்த குழாயை சரிசெய்யச் சென்றபோது அந்த நபர் குளவி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை அடுத்து, உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் உள்ள மருத்துவ பரிசோதகர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
நோர்வூட் பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R