2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

ஃபேஸ்புக் பாவனையாளர்களே உஷார்

Ilango Bharathy   / 2021 ஜூலை 08 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளவில் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள நிறுவனமாக பேஸ்புக் நிறுவனம் காணப்படுகின்றது.

கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு நடவடிக்கைகளுடன் அண்ட்ரொய்ட் டிவைஸ்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கானத் தீவிரப் பணிகளைக் கூகுள் நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.

எனினும் கூகுள் பிளே ஸ்டோரில் 5.8 மில்லியனுக்கும் அதிகமான டவுன்லோட்களைக்  கொண்ட சில அண்ட்ரொய்டு அப்கள், பாவனையாளர்களின்  ஃபேஸ்புக் கடவுச் சொற்களை (pass word) திருடி வருவதாக ஒரு புதிய ஆராய்ச்சி அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் டாக்டர் வெப் (Doctor Web) என்ற நிறுவனமானது  போட்டோ எடிட்டிங் மற்றும் அப் லொக் அம்சங்களை வழங்கிய சுமார் 9 அப்கள் இத்  திருட்டு வேலையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில் காணப்பட்ட இந்த அப்கள் அனைத்துமே சராசரியாக கிட்டத்தட்ட 5 மில்லியன் டவுன்லோட்ஸை கொண்டிருந்ததாகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல் வெளியாகியுள்ளது. இவ்வறிக்கையானது வெளியானவுடன் கூகுள் சில அப்களை தனது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த அப்களின்  பட்டியல் இங்கே:

1.PIP Photo,

2.Processing Photo,

3.Rubbish Cleaner,

4.Horoscope Daily,

5.App Lock Keep,

6.Lockit Master,

7.Horoscope Pi,

8.App Lock Manager,

9.Inwell Fitness.

உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் மேற்காணும் அப்ஸ்களில் ஏதேனும் ஒரு ஆப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உடனடியாக அதை நீக்கி விடுங்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .