2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விண்வெளிக்குச் சுற்றுலா சென்ற நால்வர்

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 17 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விண்வெளிச் சுற்றுலாவின் ஒரு பகுதியாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சார்பில் முதன் முதலாக பொதுமக்களில் நான்கு பேர் விண்வெளிக்குச் சென்றுள்ளனர்.

 இதற்காக ஷிப்ட் 4 பேமன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜாரிட் ஐசக் மேன் என்ற கோடீஸ்வரர் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் அமெரிக்காவின் புளோரிடாவின் கேப் கேனவரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 பின்னர் அவர்கள் டிராகன் காப்ஸ்யூலில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அடுத்த சில நிமிடங்களில் ஸ்பேஸ் எக்ஸ் ரொக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.

தற்போது விண்ணுக்குச் சென்றுள்ள இந்நால்வர் 3 நாட்கள் விண்வெளியில் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .