2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

இனிமேல் முடியாது

Editorial   / 2021 மே 11 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நம்மில்  பலர் சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்திகளை முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் ஏனையோருக்கு  பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளோம்.

இதனால் சில நேரங்களில்  தெரிந்தோ தெரியாமலோ போலி செய்திகள் சமூகத்தில் உலாவ நாமும் காரணமாகிவிடுகின்றோம்.

இந் நிலையில் இத் தவறை சரி செய்ய மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள சமூகவலைதளமான  பேஸ்புக் 'Read First' என்ற புதிய அம்சமொன்றினை சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தியுள்ளது.

குறித்த அம்சத்தின் மூலம் பேஸ்புக்கில் பதிவிடப்படும் செய்தி மற்றும் லிங்குகளை படிக்காமல் மற்றவர்களுக்கு பகிர முடியாது.

அதாவது இவ் அம்சமானது, பயனர்கள் ஒரு செய்தியின் தலைப்பையோ அல்லது படத்தையோ மாத்திரம் பார்த்துவிட்டு செய்தியை படிக்காமலேயே அதன் லிங்கை ஷேர் செய்ய முயன்றால், அதனை  முழுமையாக படிக்காமல் தங்களால் பகிர முடியாது என திரையில் தெரிவிக்கின்றது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .