2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

டுவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக இந்தியர் நியமனம்

J.A. George   / 2021 நவம்பர் 30 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி  ஜாக் டோர்சி நேற்று அந்த பதவியை  ராஜினாமா செய்தார். இதனையடுத்து, டுவிட்டர் நிறுவனத்தின் அடுத்த சிஇஓ யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்தன.

இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

இந்தியாவை பூர்விகமாக கொண்ட பராக் அகர்வால் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்தவர். இவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் டுவிட்டர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். 

டுவிட்டரில் ஆயிரத்துக்கும் குறைவான பணியாளர்கள் இருந்த போது பணியில் சேர்ந்த பராக் கடின உழைப்பால் படிப்படியாக பதவி உயர்வு பெற்று தற்போது அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்துள்ளார். 

கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற முக்கிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக பொறுப்பு வகிக்கும் இந்தியர்களான சுந்தர் பிச்சை (கூகுள்) மற்றும் சத்யா நாதெள்ளா ஆகியோரை தொடர்ந்து பராக் அகர்வாலும் முக்கிய நிறுவனமான டுவிட்டரின் தலைமை பொறுப்புக்கு உயர்ந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .